சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாடல் எப்படி? - ‘என்னை இழுக்குதுடி’ என தொடங்கும் பாடலை பாடகர் தீ உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். பொதுவாக தீ பாடும் பாடல்களில் அவரின் குரல் தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்தப் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய குரலால் ஸ்கோர் செய்கிறார். மெலிதான குரலில் ‘என்னை இழு இழு இழு என இழுக்குதடி’ என இழுக்கும்போது ஒரு வித வைப் ஒட்டிக்கொள்கிறது. குறிப்பாக ஹம்மிங் பகுதி கரைய வைக்கிறது. ஜாலியான காதல் பாடலாக ரசிக்க வைக்கிறது. ஜெயம் ரவி - நித்யா மேனன் இருவருக்குமான பாடலாக உருவாகியுள்ளது. சிங்கிள் வீடியோவில் தீயின் நடனத்தையும் காண முடிகிறது.
காதலிக்க நேரமில்லை: கிருத்தி உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யாமேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிகிறது. பாடல் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago