சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி!

By ஸ்டார்க்கர்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தை தொடங்கவுள்ளார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படத்தை இயக்கவுள்ளார் சுதா கொங்காரா. அதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.

சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இது அவருடைய இசையில் உருவாகும் 100-வது படமாகும். இதில் வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக ஜெயம் ரவி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் புதிதாக இருக்கும் என்கிறது படக்குழு.

படப்பிடிப்பு தேதிகள் அனைத்தும் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக உறுதியளித்துள்ளார் ஜெயம் ரவி. இதில் நடிப்பதற்கு ஜெயம் ரவிக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்படவுள்ளது. சூர்யா நடிக்கவிருந்த ‘புறநானூறு’ படத்தை தான் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தொடங்கவுள்ளார் சுதா கொங்காரா. சூர்யா - சுதா கொங்காரா இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் அவர்கள் மீண்டும் இணையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்