பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். தனது வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை, தனது குடும்பத்தினருடன் அருண் விஜய் சமீபத்தில் பார்த்தார். கிளைமாக்ஸ் முடிந்ததும் அவருடைய குடும்பத்தினர் கண்கலங்கினர். அருண் விஜய் இதற்கு முன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால், அவர்கள் கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் திரையுலகில் கால் பதித்த காலத்திலிருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, நடிகனாக, ‘எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா?’ என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பின்போது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. இப்போது வெள்ளித்திரையில் காணும்போது, என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
என் பெற்றோரைப் பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், ‘வணங்கான்’ மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.
இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்கபலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சிக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அருண் விஜய் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago