‘வாழு... வாழ விடு’ - தனுஷ் பேசும் வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

By செய்திப்பிரிவு

‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். அதன் எதிரொலியாக பகிரங்க கடிதம் ஒன்றையும் நயன்தாரா எழுதி இருந்தார். இந்தச் சூழலில் அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன், தனுஷை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ‘வாழுங்க... வாழ விடுங்க’ என தனுஷ் பேசியது இடம்பெற்றுள்ளது. அதோடு அவர் அனுப்பிய நோட்டீஸும் அதில் இடம்பெற்றுள்ளது. “வாழு... வாழ விடு. அன்பை பரப்புங்கள். ஓம் நம சிவாய. இதையெல்லாம் நம்பும் உண்மையான ரசிகர்களுக்காகவும், அடுத்தவரின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காணும் வகையில் மாற வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என விக்னேஷ் சிவன் அதில் குறிப்பிட்டுள்ளார். | வாசிக்க > “நீங்கள் செய்வது பழிவாங்கும் முயற்சி” - தனுஷுக்கு நயன்தாரா பகிரங்க கடிதம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்