ரஜினியின் பிறந்த நாளான டிச.12-ல் ‘தளபதி’ ரீரிலீஸ் 

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான ‘தளபதி’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட உள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த திரைப்படம் ‘தளபதி’. ஷோபனா, அரவிந்த் சாமி, ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். இந்தப் படம் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் ‘க்ளாசிக்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 12-ம் தேதி ‘தளபதி’ படம் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது.

எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் நிறுவனம் இந்தப் படத்தை தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் மறு வெளியீடு செய்கிறது. ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவர் அடுத்து நடிக்க இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும், அவர் தற்போது நடித்து வரும் ‘கூலி’ படத்தில் சிறப்பு வீடியோவும் வெளியாகும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்