பா.இரஞ்சித் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் ‘காலா’ படம் ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினி நடித்திருப்பதாலேயே படத்துக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காவிரி விவகாரத்தில் கன்னட மக்களுக்கு எதிராகப் பேசியதாக அங்கு எதிர்ப்பு வலுக்க, தூத்துக்குடி போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழர்களிடமும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், பா.இரஞ்சித் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி...
ரஜினி உங்கள் கருத்துகளுக்கு அப்படியே எதிர்மறையான எண்ணம் கொண்டவர். அவரை வைத்து உங்கள் கருத்துகளைப் படத்தில் சொல்வதை மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறீர்கள்?
தெரியவில்லை. அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போது இருக்கின்ற அரசியல் சூழலில், அது என்னவாக மாற்றம் பெறும் எனத் தெரியவில்லை. என்னுடைய கொள்கைகள் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. சினிமா மூலமாக அதைச் சொல்வதற்கு பெரிய இடம் கிடைத்திருக்கிறது. அந்த இடத்தில் என்னுடைய கொள்கைகள் சார்ந்து, நான் நம்புகிற அறம் சார்ந்து பேசவேண்டும் என நினைக்கிறேன். அந்த அறம், நிச்சயமாக என்னுடைய பார்வையிலேயே புரிந்து கொள்ளப்படும் என நம்புகிறேன்.
தலித் வாக்கு வங்கி என்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் என சினிமா சார்ந்தே இருந்தது. திருமா போன்றவர்களின் வருகைக்குப் பிறகுதான் தங்களுக்கென தனி வாக்கு வங்கி பிரிந்தது. ரஜினி மூலம் மீண்டும் அதை நீங்கள் சினிமாவுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளதே...
நான் ரஜினி சாரை வைத்து இரண்டு படங்கள்தான் எடுத்திருக்கிறேன். அதற்கு முன்பு தினேஷையும் கார்த்தியையும் வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறேன். இது வெறுமனே ரஜினி சாருக்கு சப்போர்ட் பண்ற விஷயம் கிடையாது. நமக்குக் கிடைத்த ஒரு கதாநாயகனை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறோமே தவிர, முழுக்க தலித்துகள் ரஜினி சார் பக்கம் போய்விடுவார்களோ என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. படத்திலும் நான் அப்படிச் சொல்லவில்லை. இது ஒரு திரைப்படம், அதற்குள் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகிறோம். மக்களுடைய பிரச்சினைகளைத்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். எனவே, தலித் வாக்கு வங்கி அவர் பக்கம் சென்றுவிடுமா என்று அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
இன்றைய சூழலில், மக்களும் அப்படி இல்லை என்றே நான் நினைக்கிறேன். ‘நாம் என்ன பேசுகிறோம், எதை நோக்கி நகர்கிறோம்’ என இன்றைய இளைஞர்கள் தெளிவாக முன்னெடுப்பு செய்கின்றனர். இன்றைய தமிழகச் சூழலில் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. எனவே, அப்படி நடப்பதற்கான வாய்ப்பு இல்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago