சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர் எப்படி? - காதல், ஆக்‌ஷன், காமெடி! 

By செய்திப்பிரிவு

சென்னை: சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - காஃபி கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த். அவ்வப்போது பார்டைம் வேலையாக அடிதடி, சண்டைகளிலும் ஈடுபடுகிறார். இன்னொரு பார்ட் டைம் வேலை காதலிப்பது. நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவது, பெண்ணிடம் காதலிக்க சொல்லி வலியுறுத்துவது, ஏன் காதலிக்கவில்லை என கேட்டு ‘டார்ச்சர்’ செய்வது, அந்த பெண்ணுக்கு எதிராக காதல் தோல்வி பாடலை பாடுவது என பழமையான காட்சிகள் டீசரில் தெறிக்கின்றன. ஜிப்ரான் இசை கவனிக்க வைக்கிறது. படம் வரும் நவம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மிஸ் யூ: ‘சித்தா' படத்தின் வெற்றிக்கு பிறகு சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘மிஸ் யூ'. இதை 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மாப்ள சிங்கம்’, 'களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்குகிறார். டீசர் வீடியோ:


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்