‘அமரன்’ படம் உண்மை சம்பவம் என்பதால் எனது கருத்தை திணிக்க முடியாது: இயக்குநர்

By செய்திப்பிரிவு

உதகை: உண்மை சம்பவத்தை தழுவி அமரன் படம் எடுக்கப்பட்டது என்பதால், எனது சொந்த கருத்தை திணிக்க முடியாது என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் திரையிடப்பட்ட அமரன் திரைப்படத்தை, தங்கள் குடும்பத்தினருடன் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று கண்டு ரசித்தனர். இந்நிலையில், மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற சங்கத்தினரின் அழைப்பின்பேரில், உதகையில் அமரன் படம் திரையிடப்பட்ட திரையரங்குக்கு படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வந்தார். படத்தை கண்டு ரசித்தவர்களுக்கு நன்றி கூறி கலந்துரையாடினார். அப்போது, நீலகிரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், படுகர் மக்களின் பாரம்பரியப்படி அவருக்கு தலைப்பாகை, சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறும்போது, "அமரன் படத்துக்கு மக்கள் பெரும் வரவேற்பளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீலகிரி மாவட்டத்துக்கு எப்போதெல்லாம் வருகிறேனோ, அப்போதெல்லாம் மனம் பரவசமடைகிறது. கலாச்சாரம், மரபு மற்றும் பாரம்பரியத்தை இங்குள்ள மக்கள் கைவிடுவதில்லை, தங்களின் வேர்களை மறப்பதில்லை.

அமரன் திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த திரைப்படம் ராணுவ வீரர் சம்பந்தப்பட்டது என்பதால், எனது கதையை இந்திய ராணுவத்துக்கு தெரிவித்து ஒப்புதல் பெற்ற பின்னரே திரைப்படமாக்கியுள்ளேன். இதனால், எனது சொந்த கருத்தை படத்தில் திணிக்க முடியாது. படம் குறித்து சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான கருத்து தெரிவிப்பவர்கள் அனைவருக்கும் பதில் கூறிக்கொண்டு இருக்க முடியாது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்