சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் அண்மையில் ‘ராயன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து ‘இட்லி கடை’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரனும் தயாரித்து வருகிறார்.
தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. விரைவில் சென்னையில் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளார்கள். இறுதிகட்டப் படப்பிடிப்பினை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதுவரை 75% காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார்கள். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதே நாளில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘சூர்யா44’ படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago