ஏப்ரல் 10-ம் தேதி ‘சூர்யா 44’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
‘கங்குவா’ படத்துக்குப் பின் ‘சூர்யா 44’ படம் வெளியாகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்தினை அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதனை விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூர்யா 44’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தினை 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. கோவா, சென்னை, ஹைதராபாத், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
‘சூர்யா 44’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான், ‘கங்குவா’ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் சூர்யா. அதனை முடித்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago