சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் விஜய் கனிஷ்கா

By செய்திப்பிரிவு

கே.எஸ்.ரவிகுமார் தயாரித்த ‘ஹிட் லிஸ்ட்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், விஜய் கனிஷ்கா. இவர் இயக்குநர் விக்ரமனின் மகன்.

சரத்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட் என பலர் நடித்த இந்தப் படத்தை சூர்ய கதிர், கே.கார்த்திகேயன் இயக்கினர். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில் விஜய் கனிஷ்காவின் நடிப்பு பேசப்பட்டது.

இதையடுத்து அவர் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தைத் தெலுங்கு இயக்குநர் ஹனுமான் இயக்குகிறார். பிரபல விநியோகஸ்தர் ஷோபா ராணி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விஜய் கனிஷ்கா நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.

இதற்கிடையே ஷங்கர் உதவியாளர் இயக்கும் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்