உங்கள் படம் ‘பிளாக்’ ஆக ரீமேக் ஆனது தெரியுமா? - ‘கோஹரென்ஸ்’ இயக்குநர் பதில்

By ஸ்டார்க்கர்

சென்னை: ‘Coherence’ படத்தை ‘பிளாக்’ பெயரில் ரீமேக் செய்யப்பட்டது தெரியுமா என்ற கேள்விக்கு அதன் இயக்குநர் ஜேம்ஸ் வார்ட் பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘பிளாக்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் ‘Coherence’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதனை பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினாலும், படத்தில் படக்குழுவினர் குறிப்பிடவில்லை. இதை மேற்கொள்காட்டி, ‘Coherence’ படத்தின் உரிமை வாங்கித் தான் படமாக்கினார்களா, உங்களுக்கு தெரியுமா என்று அதன் இயக்குநர் ஜேம்ஸ் வார்ட் பைர்கிட்டிடம் எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த இயக்குநர் ஜேம்ஸ், “சில ஆதாரங்களின்படி, இது COHERENCE- படத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிய வருகிறது. மேலும் படத்தை தயாரித்த நிறுவனத்தை எனக்குத் தெரியாது என்றாலும், கோட்பாட்டளவில் அவர்கள் முறையான உரிமைகளைப் பெற்றிருப்பது சாத்தியமே. எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் அவர்கள் என்னை பிரீமியருக்கு அழைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார். கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை எஸ்.எஸ்.ஐ நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்