எல்சியூ படங்களின் வரிசை என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தொடர் படங்களை ‘எல்.சி.யூ’ என்பார்கள். அதன் வரிசையில் ‘கைதி’, ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகியவற்றை இயக்கி இருக்கிறார். ‘கூலி’ முடித்தவுடன் ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து எல்.சி.யூ படங்களின் வரிசை என்ன என்பதை தெரிவித்துள்ளார்.
இது குறித்து லோகேஷ் கனகராஜ், “கரோனா காலம் மட்டுமில்லை என்றால் ரஜினி சார், கமல் சார் இணைந்து நடிக்கவிருந்த படத்தை இயக்க இருந்தேன். அது நடக்காததால் மிகவும் வருந்தினேன். அதற்கு பின் தான் கமல் சாரை வைத்து ‘விக்ரம்’ இயக்கினேன்.
‘விக்ரம்’ படத்தின் மூலம் யுனிவர்ஸ் படங்களை உருவாக்கிய போது எனக்கு தெரிந்த பலரும் பாராட்டினார்கள். முதல் 3 படங்கள் அடித்தளமாக இருக்கும், 4-வது படம் அஸ்திவாரம், 5-வது படம் அடுத்த அஸ்திவாரம், 6-வது படம் க்ளைமாக்ஸுக்கு முந்தைய படம், 7-வது அல்லது 8-வது படம் முடிவாக இருக்கும். அந்த வரிசையில் அடுத்து ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக இயக்கவுள்ளேன். ‘விக்ரம் 2’ இயக்கி எல்சியூ யுனிவர்ஸை முடிக்கவுள்ளேன்.
விஜய் சார் திரையுலகை விட்டுச் சென்றதால் தமிழகமே ஆச்சரியத்தில் இருக்கிறது. அவருடைய எண்ண ஓட்டம் வேறொரு களத்தில் இருக்கிறது. அதற்கு நாம் மரியாதை கொடுத்து பாராட்ட வேண்டும். அது மட்டும் நடக்காமல் இருந்தால் ‘லியோ 2’ செய்திருப்பேன். ‘லியோ 2’ அல்லது ‘விக்ரம் 2’ படமே எல்சியூ படங்களின் முடிவாக இருக்கும்” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago