மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘இரண்டாம் குத்து’ படத்தைத் தயாரித்த பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் அதன் விநியோக உரிமையை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு வழங்கியது. இதற்கான ஒப்பந்தப்படி, ரூ.4 கோடியே 85 லட்சத்தில், ரூ.2 கோடி பாக்கி உள்ளது. அதைத் திருப்பித் தராமல், ‘குருதி ஆட்டம்’, ‘மன்மத லீலை’ ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.
இந்தப் படங்களுக்குத் தடை கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது. அதன்படி, விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ரூ.1 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 மற்றும் ஜி.எஸ்.டி., ரூ.31 லட்சத்து 20 ஆயிரம் வழங்க, ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பணத்தை செலுத்தாமல் ‘பிசாசு -2’ படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் அந்தப் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின் படி, வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 84 லட்சத்து 43 ஆயிரத்து 794 ரூபாய் செலுத்தும் வரை ‘பிசாசு -2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த வழக்கை விசாரித்து, பிசாசு -2 படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மனுவுக்கு வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago