‘அமரன்’ முதல் நாளில் ரூ.42 கோடி வசூல் - சிவகார்த்திகேயனின் ‘சாதனை’ ஓபனிங்!

By செய்திப்பிரிவு

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் வெளியான முதல் நாள் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அமரன்’. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்.31) திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் இதுதான் அவரது முதல் நாள் அதிகபட்ச ஓபனிங் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக இருப்பதால் படத்தின் வசூல் கூடும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்