‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட ஐகோர்ட் தடை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தீபாவளியன்று ரீலீஸ் ஆகவுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சட்டவிரோதமாக 1957 இணைய தளங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டிவிக்களில் வெளியிடாமல் தடுக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கே. குமரேஷ்பாபு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, ‘உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். அதன்மூலம் திரைக் கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்’ என்றார்.

அதையடுத்து நீதிபதி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்