கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கும் கவின்!

By ஸ்டார்க்கர்

கிருஷ்ணா இயக்கவுள்ள அடுத்த படத்தில் கவின் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ மற்றும் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கிருஷ்ணா. இதில் ‘சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா என்றால் அனைவருக்கும் தெரியும். அந்தளவுக்கு அப்படத்தின் கதை, இசை உள்ளிட்டவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கிருஷ்ணாவின் அடுத்த படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்தக் கதைக்காக சில முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக கிருஷ்ணாவின் கதையில் நடிக்க கவின் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு கிருஷ்ணாவின் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்