‘அமரன்’ பார்த்த ராணுவ அதிகாரிகளின் பாராட்டு: சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

By ஸ்டார்க்கர்

‘அமரன்’ பார்த்துவிட்டு ராணுவ அதிகாரிகளின் வெளிப்படுத்திய பாராட்டால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் இருக்கிறார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அமரன்’ படத்தினை சோனி நிறுவனம், கமல் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அனைத்து மொழிகளிலும் வெளியாவதால் படக்குழுவினர் அனைத்து இடங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

டெல்லியில் ராணுவ அதிகாரிகளுக்கு ‘அமரன்’ படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி கலந்துக் கொண்டார்கள். இந்த திரையிடல் முடிந்தவுடன் படக்குழுவினரை ராணுவ அதிகாரிகள் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

குறிப்பாக சிவகார்த்திகேயனிடம் “உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். வந்து ராணுவத்தில் இணையுங்கள்” என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதுவே ‘அமரன்’ படத்துக்காக தனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மறைந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்தே ‘அமரன்’ படம் உருவாகியுள்ளது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்