சென்னை: ‘கைதி’ திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி நேற்று (அக்.25) லோகேஷ் கனகராஜ் ‘எல்சியு’ தொடர்பான போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ‘கூலி’ படத்தைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நேற்று (அக். 25) ‘கைதி’ படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு ஆனது கொண்டாடப்பட்டது. இணையத்தில் பலரும் ‘கைதி’ படம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து வந்தார்கள்.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ் திடீரென்று போஸ்டர் ஒன்றை பகிர்ந்தார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதில் ’1 Shot, 2 Stories, 24 Hours’ என்று குறிப்பிட்டு இருந்தது. மேலும், “10 minute Prelude to the Origins of LCU” என தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து விசாரித்த போது, “‘கைதி’ படத்துக்கு முன்பாக நடந்தது என்ன என்பதை ஒரு சின்ன குறும்படமாக இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட சிலர் நடித்திருக்கிறார். இந்தக் குறும்படத்தை இயக்கி, சில மாணவர்களுக்கு படம் இயக்குவது தொடர்பாக சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதையே இப்போது வெளியிடவுள்ளார். ‘எல்.சி.யு’ படங்களின் ஆரம்பப் புள்ளியாக இந்தக் குறும்படம் இருக்கும்” என்று தெரிவித்தார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago