‘அமரன்’, ‘பிரதர்’ Vs ‘ப்ளடி பெக்கர்’ - தியேட்டர் ஒதுக்கீட்டில் கடும் போட்டி!

By ஸ்டார்க்கர்

தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் திரையரங்குகள் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளது. அன்றைய வியாழக்கிழமை, அடுத்த நாள் வெள்ளிக்கிழமையும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் 4 நாட்கள் விடுமுறை கணக்கு வருகிறது. இந்த நாட்களில் வசூலை அள்ளிவிட வேண்டும் என்று தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’, ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ மற்றும் கவின் நடிக்கும் ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. தெலுங்கில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ மட்டுமே வெளியாகவுள்ளது. இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள ‘சிங்கம் அகைன்’ மற்றும் கார்த்திக் ஆர்யன் நடித்துள்ள ‘பூல் புல்லையா 2’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகவுள்ளன.

இதில் ‘அமரன்’ படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அந்நிறுவனமோ ‘வேட்டையன்’ வெளியாகும் போதே முன்னணி திரையரங்குகளுக்கு ‘அமரன்’ படத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டது. இதனால் தீபாவளி படங்களுள் அதிக திரையரங்குகள் ‘அமரன்’ படத்துக்கு கிடைக்கக் கூடும். அதேபோல் ‘பிரதர்’ படத்தின் தமிழக உரிமையினை கருணாமூர்த்தி கைப்பற்றி ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமே வெளியிடுகிறார். ஆகையால் அந்நிறுவனம் ‘அமரன்’ மற்றும் ‘பிரதர்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்து வருகிறது.

‘ப்ளடி பெக்கர்’ படத்தினை ‘கருடன்’ மற்றும் ‘மகாராஜா’ படத்தினை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இதனால் அவரும் தனது படத்துக்கு முந்தைய படங்கள் போல திரையரங்குகள் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இதற்காக அனைத்து விநியோக ஏரியாவிலும் முன்னணி விநியோகஸ்தர்களுக்கே ‘ப்ளடி பெக்கர்’ படத்தைக் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் ‘லக்கி பாஸ்கர்’ படத்தினை ராக் போர்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதுவும் கணிசமான திரையரங்குகளைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திப் படங்களான ‘சிங்கம் அகைன்’ மற்றும் ‘பூல் புல்லையா 2’ ஆகிய படங்கள் மல்டிப்ளக்ஸ் திரையரங்களில் மட்டுமே முன்னிரிமை அளிக்கப்படும். ஏனென்றால் இதர திரையரங்குகளில் பெரியளவில் மக்கள் வரமாட்டார்கள். அதுமட்டுமன்றி, ‘சிங்கம் அகைன்’ திரைப்படம் தங்களது விநியோக உரிமையினை ஒட்டுமொத்தமாக பிவிஆர் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டது. இதனால் பிவிஆர் மல்டிப்ளக்ஸில் அந்தப் படத்துக்கு தான் முன்னுரிமை அளிப்பார்கள்.

இப்படி அனைத்து படங்களுக்குமே முன்னணி விநியோகஸ்தர்களிடம் இருப்பதால், எந்தப் படத்தை திரையிடலாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள். முதல் நாள் மட்டுமே இந்தப் போட்டி நிலவும். அடுத்த நாள் மக்களிடம் எந்தப் படம் வரவேற்பினை பெறுகிறதோ, அதற்கு மாற்றிவிடுவார்கள் என்பதே உண்மை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்