சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மிதக்குது காலு ரெண்டும்’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாடல் எப்படி? - ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை மது ஸ்ரீ பாடியுள்ளார். பார்வதி மீரா பாடலை எழுதியுள்ளார். பூமிகா - நட்டி திருமண நிகழ்வில் பிரியங்கா மோகன் பாடும் பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடலின் ஸ்பெஷல் மதுஸ்ரீயின் குரல். தனித்து தெரிகிறது. அதற்கு ப்ரியங்கா மோகனின் நடன அசைவுகள் வலு சேர்க்கிறது. ‘இவன் ஆல்ரெடி தீப்பந்தம் தானே, கிட்ட வந்ததும் பத்திக்கிட்டேனே’ என சொற்பமான வரிகள் கவனிக்க வைக்கின்றன. காதல் பாடலாக உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதர்: எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘பிரதர்’. இந்தப் படத்தில் பூமிகா, நட்டி, விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். குடும்ப கதையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
» வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கும் பிரபாஸ்: ‘தி ராஜாசாப்’ போஸ்டர் வெளியீடு
» அழகில் தீர்த்தொரு சிலையழகே... அதிதி பாலன் அசத்தல் க்ளிக்ஸ்!
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago