‘காலா’ சுவாரஸ்யங்கள்: கம்ப்ளீட் ஸ்கேனிங்

By சி.காவேரி மாணிக்கம்

‘காலா’ படம் குறித்த சின்னச் சின்ன சுவாரஸ்யத் தகவல்களை ‘தி இந்து’ வாசகர்களுக்காக தொகுத்துத் தந்துள்ளோம்.

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, உடனேயே ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்த படம் ‘காலா’. “கபாலி படத்தை உங்களுக்காக இயக்கினீர்கள். ‘காலா’ படத்தை என் ரசிகர்களுக்காக இயக்குங்கள்” என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதால், ரஜினிக்கான பில்டப்ஸ் படத்தில் நிறைய இருக்கிறது. அதேசமயம், தன்னுடைய வழக்கமான கருத்துகளைப் படம் முழுக்கச் சொல்லியிருக்கிறார் பா.இரஞ்சித்.

ரஜினியின் காதலியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் பெயர் ஷெரீனா. அதைப் பேச்சுவழக்கில் சரீனா என்று அழைப்பதுபோல், தன்னுடைய வலது கையில் ‘சரீனா’ என்று பச்சை குத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து ‘காலா’வுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மும்பை, தாராவியில் உள்ள டோபடெலிக்ஸ் இசைக்குழு இதில் சில பாடல்களுக்கு வரிகள் எழுதியிருப்பதோடு, பாடவும் செய்திருக்கின்றனர்.

‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘மாயநதி’ பாடல் பயங்கர ஹிட். முதிர்ந்த வயது காதலை அழகாகச் சொன்ன இந்தப் பாடலை உமாதேவி எழுதியிருந்தார். அவரே ‘காலா’ படத்தில் ‘கண்ணம்மா’ பாடலைப் பாடியிருக்கிறார். இதுவும் முதிர்வயது காதலைச் சொல்லும் பாடல் தான். ‘மாயநதி’ பாடிய பிரதீப் குமாருடன் சேர்ந்து சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

நம்முடைய குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட, நமக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்த மாதிரி நம்முடைய குடும்பங்களைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் இந்தப் படத்திலும் இருக்கின்றன.

இது ரஜினியின் படம். ஆனால், படமும், ‘காலா’ என்ற கதாபாத்திரமும் மக்களுடைய நிலத்தைப் பற்றியும் அவர்களுடைய வாழ்வியல் பற்றியும் நிறையப் பேசும். நிச்சயமாக, ரஜினி படமாகவும் மக்களுடைய படமாகவும் ‘காலா’ இருக்கும்.

பெரிய நடிகர் பட்டாளம் இருந்தாலும், யாருமே சினிமா ஆட்களாகத் தனித்துத் தெரிய மாட்டார்கள். எல்லாருமே கதையில் வரும் கதாபாத்திரங்களாகவே தெரிவார்கள். அந்தவகையில் கலர்ஃபுல்லான ‘காலா’வாக நிச்சயம் இருக்கும்.

‘காலா’ படத்தில் ரஜினியின் சின்ன வயது கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார் என்று தகவல் பரவியது. ஆனால், அவர் நடிக்கவில்லை என்கிற பா.இரஞ்சித், இந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கான தேவையும் ஏற்படவில்லை என்கிறார். தயாரிப்பாளராக தங்களை சுதந்திரமாக வேலைசெய்ய விட்டதாகவும் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

‘காலா’ படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள், 14 இடங்களில் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். அப்படி வெட்டாவிட்டால் ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கும் எனச்சொல்ல, 14 இடங்களிலும் வெட்டுவதற்கு ஒப்புக்கொண்டது படக்குழு. அதன்பிறகு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை வாரிய உறுப்பினர்கள்.

‘காலா’வின் மொத்த ரன்னிங் டைம், 2 மணி நேரம் 47 நிமிடங்கள். அதாவது, 167 நிமிடங்கள். ஆனால், தெலுங்கில் 3 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, 164 நிமிடங்கள் மட்டுமே ஓடும். தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தான் வழங்கப்பட்டுள்ளது.

படத்தில் நெல்லைத் தமிழ்ப் பேசி பெரும்பாலானவர்கள் நடித்துள்ளனர். காரணம், தாராவியில் வசிக்கக்கூடிய பெரும்பாலானவர்கள் நெல்லையில் இருந்து புலம்பெயர்ந்து தாராவிக்குச் சென்றவர்கள். அதேசமயம், வசனங்கள் எல்லோருக்கும் எளிமையாகப் புரியவேண்டும் என்பதற்காக அதிகமாக வட்டார வழக்கில் சிக்கிக் கொள்ளவில்லை.

‘கபாலி’ படத்தில் பணியாற்றும்போது, ரஜினியிடம் எப்படி வேலை வாங்குவது என்ற தயக்கம் பா.இரஞ்சித்திடம் இருந்திருக்கிறது. ஆனால், ‘காலா’வில் அப்படி இல்லை. ‘எனக்கு இதுதான் வேண்டும், இப்படித்தான் வேண்டும்’ என்பதை ரஜினியிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டாராம் பா.இரஞ்சித்.

தாராவி தான் கதைக்களம் என்பதால், அங்கு வசிக்கும் மக்களின் முகச்சாயல் கொண்ட நடிகர்களாகத் தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் இந்தப் படத்தில் வில்லனாக நானா படேகரை ஒப்பந்தம் செய்தனர்.

‘காலா’ படம் ஃபேமிலி டிராமாவாக இருந்தாலும், கடைசி 40 நிமிடங்களில் அதிரடி சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம். திலீப் சுப்பராயன் இந்த சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ‘கபாலி’ படத்தில் அன்பறிவ் என்ற இரட்டையர்கள் சண்டை இயக்குநர்களாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்