சிங்கிள் டேக்கில் 18 நிமிட காட்சி: ‘வீரதீர சூரன்’ அப்டேட்

By ஸ்டார்க்கர்

‘வீரதீர சூரன்’ படத்தில் 18 நிமிடக் காட்சி ஒன்றினை சிங்கிள் டேக்கில் எடுத்துள்ளது படக்குழு.

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்ரமுடு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வீரதீர சூரன்’. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பினை முழுமையாக முடிக்க, படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது.

இதனிடையே, இந்தப் படத்தில் நடித்துள்ள சுராஜ் வெஞ்ரமுடு 18 நிமிடக் காட்சி ஒன்று குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். அந்தக் காட்சியில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா மற்றும் தான் இடம்பெற்றதாகவும், அது போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியொரு காட்சியினை தனது வாழ்நாளில் செய்ததில்லை எனவும், அதை ஒரே டேக்கில் எடுத்தது மறக்க முடியாத அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார் சுராஜ் வெஞ்ரமுடு. 18 நிமிடக் காட்சி, சிங்கிள் டேக் என்றால் அதற்கு எவ்வளவு பெரிய மெனக்கிடல் வேண்டும் என படக்குழுவினரை இணையத்தில் பாராட்டி வருகிறார்கள்.

’வீரதீர சூரன்’ படத்தின் தமிழக உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்