“அதான் துப்பாக்கியை வாங்கிட்டாரே… விரைவில் நடக்கும்” - சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்

By செய்திப்பிரிவு

சென்னை: “படம் பண்ணுவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். அதான் துப்பாக்கியை கையில் வாங்கி விட்டாரே. விரைவில் புதிய படத்தில் இணைவோம்” என சிவகார்த்திகேயன் வைத்து படம் இயக்குவது குறித்து லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அமரன்’. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்.18) சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “நியை டிஷ்யூ பேப்பர்களை வைத்துக் கொண்டு கமல் இந்தப் படத்தை பார்த்தார் என கேள்விப்பட்டேன். இந்தப் படம் கொண்டாட்டமான திரைப்படம் கிடையாது. தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படம்” என்றார்.

அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், “டான் சிவகார்த்திகேயனுடன் எப்போது படம் பண்ண போகிறீர்கள்?” என கேட்க, அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “நீண்ட நாட்களாக அது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். அதான் துப்பாக்கியை கையில் வாங்கிவிட்டாரே, விரைவில் நடக்கும்” என்றார்.

அண்மையில் வெளியான விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சிவகார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கி கொடுப்பார். “இத நீங்க பாத்துக்கோங்க” என விஜய் சொல்ல, “இத விட அவசர வேலையா நீங்க போறீங்க இனி இத நான் பாத்துக்குறேன்” என்பார். இந்த வசனத்தை முன்வைத்து விஜய்யின் தொடர்ச்சி சிவகார்த்திகேயன் என ரசிகர்கள் பேசி வரும் சூழலில், அதையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்