சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா ‘அலங்கு’ படத்தை தயாரிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் அடுத்து இயக்கும் படம், ‘அலங்கு’. இதில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. படத்துக்கு அஜீஷ் இசை அமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, டி.சபரீஷுடன் இணைந்து தயாரிக்கிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அன்புமணி ராமதாஸுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிட்டு தோல்வியை சந்தித்திருந்தார். தேர்தல் நேரத்தில் தனது தாய்க்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா பிரச்சாரங்களை மேற்கொண்டது குறிப்பிடதக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago