டிராஃபிக் ராமசாமியும், எஸ்.ஏ.சி.யும் ஒரே டைப்!: இயக்குநர் விக்னேஷ்வரன் நேர்காணல்

By ஜெ.சரவணன்

நீதியைக் கண்டால் தனி ஒருவராகப் போராடக் கிளம்பிவிடும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. அந்தப் போராளியின் வாழ்க்கையைச் சமுதாயம் படிக்க வேண்டிய படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன். படத்தின் வெளியீட்டு வேலைகளில் பிஸியாக இருந்தவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்..

டிராஃபிக் ராமசாமிதான் உங்கள் முதல் படத்தின் கரு என தீர்மானித்தது ஏன்?

சுதந்திரத்துக்கு முன்பெல்லாம், வீட்டில் யாராவது நாட்டுக்காகப் போராடப் போறேன்னு சொன்னா, சந்தோஷமா அனுப்பி வச்சாங்க. இப்போ, ‘போடா கிறுக்குப் பயலே.. உருப்படியா, வேற வேலை இருந்தா பாரு’ன்னு சொல்வாங்க. சுதந்திரம் கிடைச்சு 70 வருஷம் ஆனப்புறமும், அதே கோபத்தோடு ஒருத்தர் வீதியில இறங்கிப் போராடுறாரு. அவருக்கு என்ன அவசியம் இருக்குன்னு அவர் கதையைப் படிக்க ஆரம்பிச்சேன். படிச்சு அசந்து போய்ட்டேன். என் முதல் படம் அவரைப் பற்றியதா இருக்கணும்னு முடிவு பண்ணேன். தவிர, எங்கே பார்த்தாலும் பிரச்சினை, போராட்டம்னு இருக்கிறப்போ, காதல் படம் எடுத்தா நல்லா இருக்குமா? வயிறு சரியில்லாத குழந்தைக்கு பிரியாணி தரமுடியுமா?

எஸ்.ஏ.சந்திரசேகரை எப்படி தேர்வு செய்தீர்கள்?

நான் அவர்கிட்ட உதவி இயக்குநரா 6 வருஷம் வேலை பாத்திருக்கேன். அவரை வைத்து ‘மார்க்’ என்ற குறும்படமும் இயக்கினேன். படம் எடுக்கச் சொல்லி என்னை பலமுறை கேட்டார். ‘நீங்க சொல்றதுக்காக எடுக்க முடியாது. எனக்குத் தோணும்போதுதான் எடுப்பேன்’னு சொல்வேன். ‘வாய்ப்பு உன்னைத் தேடி வர்றதால உனக்கு அதோட அருமை தெரியல’ன்னார். அது சரின்னு பட்டுச்சு. அப்போதான் டிராஃபிக் ராமசாமி பத்தின ‘ஒன் மேன் ஆர்மி’ புத்தகத்தை அவர்கிட்ட கொடுத்தேன். படிச்சுட்டு, உடனே ஓகே சொன்னார். அநியாயத்தைக் கண்டா பொங்குவதில் டிராஃபிக் ராமசாமியும், எஸ்.ஏ.சி.யும் ஒரே டைப்தான்! ஒரு படம் பண்ணவங்களே அலப்பற செய்யுறப்போ, 69 படம் பண்ணின அவர் கொஞ்சம்கூட அலட்டிக்காம, இன்னமும் முதல் படம் பண்ற மாதிரி தான் இருக்கார். தவிர, அவர் இந்தப் படத்துக்கு தயாரிப்பாளரும்கூட. ஆனால், இதையெல்லாம் நான் என் தலையில் ஏத்திக்கல. என் படத்துல அவர் நடிக்கிறார், அவ்வளவுதான்.

அவரது மனைவியாக ரோகிணி நடித்திருப்பது பற்றி..

டிராஃபிக் ராமசாமியின் போராட்டங்களின் விளைவுகளை அதிகம் அனுபவித்தவர் அவரது மனைவியாகத்தான் இருக்க முடியும். அவர் பட்ட அடிகளுக்கும், அடைந்த காயங்களுக்குமான வலியை அவரது மனைவி மூலம்தானே நம்மால் உணர முடியும்? அந்தக் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் ரோகிணி.

படம் பற்றி டிராஃபிக் ராமசாமி என்ன சொன்னார்?

‘என்னைப் பத்தியெல்லாம் படம் எடுக்கறீங்களா?’ன்னு ஷாக் ஆயிட்டார். முழுக்க அவர் கடந்துவந்த பயணத்தைக் கேட்டறிந்து கவனமா படத்தை உருவாக்கியிருக்கோம். டிராஃபிக் ராமசாமி போன்றவர்கள் எதிர்காலத்தின் நம்பிக்கை. பல விடியல்களுக்கான விதை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்