சென்னை: விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘சார்’. இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். சாயாதேவி கண்ணன், சரவணன், ரமா, சிராஜ் எஸ், ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்துகுமார் இசையமைத்துள்ளார். முதலில் ‘மா.பொ.சி’ என்று தலைப்பிடப்பட்ட இப்படம் பின்னர் ‘சார்’ என்று மாற்றப்பட்டது. படத்தின் வசனங்களை சுகுணா திவாகர் எழுதியுள்ளார். இப்படம் வரும் அக்.18 வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? - படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இது சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த ‘வாகை சூட வா’ படத்தின் இன்னொரு வடிவமோ என்று தோன்றுகிறது. காட்சியமைப்புகள், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வசனங்கள் பல இடங்கள் அந்த படத்தை நினைவூட்டுகின்றன. ட்ரெய்லரில் வரும் பெண் கல்வி தொடர்பான வசனங்கள் ஈர்க்கின்றன. சாதிய ஒடுக்குமுறை, கல்வி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட கருத்துகளை படம் வலுவாக பேசியிருக்கும் என்று தெரிகிறது. சித்து குமாரின் பின்னணி இசை ட்ரெய்லரில் கவனம் ஈர்க்கிறது. ’சார்’ ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago