சென்னை: நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கும் புதிய படத்துக்கு ‘சீதா பயணம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
1981-ம் ஆண்டு வெளியான ‘சிம்ஹதா மாரி சைன்யா’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜுன். 1984-ல் வெளியான ‘நன்றி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். தொடர்ந்து 1992-ல் வெளியான ‘சேவகன்’ படத்தின் மூலம் இயக்குநராக பரிணமித்தார். ‘ஜெய் ஹிந்த்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘வேதம்’, ‘ஏழுமலை’ என 12 படங்களை இயக்கியுள்ளார். 2018-ல் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கினார்.
இந்நிலையில் 6 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் இயக்குநர் நாற்காலிக்கு திரும்பியுள்ளார் அர்ஜுன். அவர் இயக்கும் புதிய படத்துக்கு ‘சீதா பயணம்’ என பெயரிடப்பட்டுள்ளது. தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. அர்ஜுன் நடிப்பில் அடுத்ததாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago