இணையத்தில் எழுந்த சர்ச்சை: ‘கங்குவா’ தயாரிப்பாளர் விளக்கம்

By ஸ்டார்க்கர்

இணையத்தில் எழுந்த சர்ச்சைக்கு, ‘கங்குவா’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கமளித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தினை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் கலந்துரையாடினார் ஞானவேல்ராஜா. அப்போது ஏன் படத்தின் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு “சமீபத்தில் ஒரு பெரிய படம் ஒன்று வெளியானது, அதில் டாப் நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர். அதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாகவும் அறிவித்தார்கள். ஆனால், அது எதுவுமே படத்தின் முதல் நாள் வசூலாக மாறவில்லை” என்று பதிலளித்தார் ஞானவேல்ராஜா.

இணையத்தில் பலரும் ஞானவேல்ராஜா குறிப்பிட்டது ‘வேட்டையன்’ படத்தை தான் என குறிப்பிட்டார்கள். இதனை முன்வைத்து ரஜினி ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். இந்தச் சர்ச்சை தொடர்பாக பேட்டியொன்றில் “நான் குறிப்பிட்டது இந்தியில் வெளியான ‘கேல் கேல் மெயின்’ படத்தை தான். பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும், அந்தப் படம் மக்களிடையே எதிர்பார்ப்பைப் பெறவில்லை. யாருமே நான் எந்தப் படத்தைக் குறிப்பிட்டேன் என கேட்காமல் அவர்களுடைய எண்ணோட்டத்தில் பேசி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்