ராணுவப் பின்னணியில் உருவாகும் ‘பரிசு’

By செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் கலா அல்லூரி எழுதி இயக்கியுள்ள படம், ‘பரிசு’. நாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜான்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெய்பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், சென்ராயன், சச்சு உட்பட பலர் நடித்துள்ளனர்.  கலா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் கலா அல்லூரி கூறும்போது, “ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான தந்தை, மகளையும் ராணுவத்தில் சேர சொல்கிறார். அப்பாவின் விருப்பப்படி சேர்கிறார் மகள். பிரச்சினைகளையும், தடைகளையும் எதிர்கொண்டு எப்படி வெற்றி பெறுகிறார் என்பது படம். நம் நாட்டில் பெண்கள் எல்லா துறையிலும் முன்னேறி வருகிறார்கள்.

அதற்குரிய வாய்ப்புகளை அரசாங்கம் அளிக்கிறது. இந்தப் படத்தின் நாயகியும் தடைகளை மீறி சாதனை படைக்கிறாள். என்ன சாதனை, எப்படி என்பதுதான் கதை. விவசாயப் பிரச்சினை, தூய்மை இந்தியா கருத்துகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்