வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை பேட்டியொன்றைல் உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
மனைவியுடன் விவாகரத்து சர்ச்சைக்கு இடையே, தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. தீபாவளிக்கு ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘டாடா’ இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஜெயம் ரவி.
மேலும் ‘ஜீனி’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்தியில் நடிப்பதற்கு சில இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஜெயம் ரவி. அதுமட்டுமன்றி தமிழில் வெற்றிமாறனை சந்தித்து பேசியிருக்கிறார்.
» மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் எப்போது? - இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
» பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய நியூஸி: வெளியேறிய இந்தியா - மகளிர் டி20 WC
தான் தொடர்ச்சியாக இவ்வளவு படங்கள் இயக்கவிருப்பதாகவும், இதனை முடித்துவிட்டு பண்ணலாம் எனவும் ஜெயம் ரவியிடம் கூறியிருக்கிறார் வெற்றிமாறன். அதுமட்டுமன்றி தன்னிடம் கதையொன்று உள்ளது, அதை விரைவில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.
வெற்றிமாறனின் கதையில் விரைவில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். பிறகு வெற்றிமாறன் தனது படங்களை எல்லாம் முடித்துவிட்டு, ஜெயம் ரவியை இயக்கவிருப்பதும் முடிவாகி இருக்கிறது. இந்த தகவல்களை பேட்டியொன்றில் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago