‘இனிது இனிது’, மிஷ்கின் இசையமைத்த ‘டெவில்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள த்ரிகுண், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. அனு விஷுவல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜி.ராஜசேகர் இயக்கியுள்ளார். விஜய் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி த்ரிகுண் கூறும்போது, “எனக்கு கோவைதான் சொந்த ஊர். நான் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் இங்கு பார்ப்பவர்கள், ‘தமிழ்ல என்ன படம் பண்ற?’ என்று கேட்கும்போது வருத்தமாக இருக்கும். அதனால் தமிழில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில்தான் ராஜசேகர் இந்தப் படத்தின் கதையைச் சொன்னார்.
இந்தப் படத்துக்காக ஈசிஆரில் பாடல் காட்சியை படமாக்கினோம். அதே இடத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். இப்போது ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதில் மூன்று கதாநாயகிகள். அவர்களிடம் மாட்டிக்கொண்டு ஹீரோ என்ன பாடுபடுகிறார் என்பதுதான் கதை. ரொமான்ஸ் காமெடி திரைப்படம். அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago