சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி்த்ராவின் தந்தை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், ஹேம்நாத் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த சித்ராகடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சி்த்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், அரசு தரப்பு சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களை மகளிர் நீதிமன்றம் முறையாக கவனத்தில் கொள்ளாமல் ஹேம்நாத்தை விடுதலை செய்துள்ளது. எனவே அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவ.5-க்கு தள்ளிவைத்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago