இயக்கம் ஆர்.ஜே.பாலாஜி, இசை ஏ.ஆர்.ரஹ்மான் - ‘சூர்யா 45’ அதிகாரபூர்வ அப்டேட்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

‘சூர்யா 45’ தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் அரிவாள், வேல் ஆகியவற்றில் பட்டையிடப்பட்டுள்ளது. இவையாவும் ஆன்மிகம் - ஆக்‌ஷனுக்கான குறியீடுகளாக காட்சியளிக்கின்றன. நடுவில் குதிரை போன்ற உருவம் இடம்பெற்றுள்ளது. சூர்யா - ஏ.ஆர்.ரஹ்மான் - ஆர்.ஜே.பாலாஜி காம்போ ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வெற்றிமாறன் இயக்க உள்ள ‘வாடிவாசல்’ படத்துக்கு முன் இந்த படத்தில் நடித்து முடிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்