சென்னை: ’கங்குவா’ படத்தின் அடுத்த திட்டங்கள் என்ன என்பது குறித்து ஞானவேல்ராஜா கலந்துரையாடல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை 2 டீஸர்கள், ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. இதர விளம்பர பணிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
மேலும், ‘கங்குவா’ படத்தின் இப்போதைய காட்சிகள் எதுவுமே டீஸரில் காட்டப்படவில்லை. இதனிடையே, எக்ஸ் தளத்தில் சூர்யா ரசிகர்களுடன் கலந்துரையாடினார் ‘கங்குவா’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் ஞானவேல்ராஜா, ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் சில வாரங்கள் கழித்து வெளியாகும்.
தமிழில் மட்டுமே சூர்யா டப்பிங் பேசியிருக்கிறார். இதர மொழிகளில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கி இருக்கிறோம். அடுத்த வரும் நாட்களில் தினமும் ‘கங்குவா’ அப்டேட் இருக்கும். தமிழ்நாடு தவிர்த்து இதர மாநிலங்கள் அனைத்திலும் காலை 4 மணி காட்சி இருக்கும். விரைவில் வரவுள்ள ட்ரெய்லரில் தற்கால காட்சிகள் இடம்பெறும். 3டியில் படம் தயாராகி வருகிறது. அதன் மாற்றத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி இருக்கிறது. ஐமேக்ஸ் திரையரங்கில் ‘கங்குவா’ வெளியீடு இருக்காது. இந்தியில் மட்டுமே சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago