சென்னை: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல் தோற்றம் எப்படி? - படத்தின் முதல் தோற்றத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பொன்ராம், “1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள்” என குறிப்பிட்டுள்ளார். போஸ்டரை பொறுத்தவரை காவல் நிலையத்தில் காவல் துறையினரை சிறையில் அடைத்து விட்டு, அவர்களின் துப்பாக்கியை சண்முக பாண்டியன் ஏந்தி நிற்கிறார். இவர்களுக்கு நடுவே கையில் லத்தியை வைத்துகொண்டு அமர்ந்திருக்கிறார் சரத்குமார். வயதான தோற்றத்தில் வெள்ளை தாடி, வெள்ளை முடியில் சரத்குமாரை அடையாளம் காண்பதே சிரமமாக உள்ளது. இந்த முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொம்புசீவி: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘கொம்புசீவி’. இந்தப் படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago