‘மகாராஜா’ 100-வது நாள்: இயக்குநர் நிதிலனுக்கு கார் பரிசளிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்த நிலையில், படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனுக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் பிஎம்டபள்யூ கார் பரிசளித்தனர்.

விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘மகாராஜா’ திரைப்படம். இந்தப் படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். பாலியல் வன்கொடுமை குறித்து காத்திரமாக பேசிய இந்தப் படத்தின் திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக இப்படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது. ஓடிடியில் வெளியாகி உலக அளவில் கவனம் ஈர்த்து மிரட்டியது.

இந்நிலையில் ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ சார்பில் இந்தப் படத்தை தயாரித்த சுதன் சுந்தரம், ‘தி ரூட்’ தயாரிப்பு நிறுவனத்தின் ஜெகதீஸ் ஆகிய இரண்டு தயாரிப்பாளர்களும் இணைந்து இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனுக்கு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பிஎம்டபள்யூ கார் ஒன்றை பரிசளித்தனர். இந்த கார் சாவியை இயக்குநருக்கு விஜய் சேதுபதி வழங்கினார். படம் வெளியாகி 100-வது நாளை முன்னிட்டு இயக்குநருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்