பிக் பாஸ் சீசன் 8-ல் போட்டியாளர்கள் விவரம் தெரியவந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதனை கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வந்தார். ஆனால், இந்த சீசனின் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி இந்த சீசன் முதல் தொகுப்பாளராகி இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று மாலை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்போது போட்டி தொடங்கிவிட்ட நிலையில், யாரெல்லாம் போட்டியாளர்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.
> ரவீந்தர் சந்திரசேகர் - சில படங்கள் தயாரித்துள்ளார். ஒவ்வொரு பிக் பாஸ் போட்டியின்போதும் அதில் கலந்துக் கொள்பவர்கள் பற்றி யூடியூப் பேட்டிகள் அளித்து வந்தவர்.
> முத்துக்குமரன் - தமிழ் சொற்பொழிவாளர். இணையத்தில் மிகவும் பிரபலம்.
» ‘தெறி’ இந்தி ரீமேக் - கவுரவ தோற்றத்தில் சல்மான் கான்!
» திண்டுக்கல் அருகே சாலை விபத்து - கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு
> ஜாக்லின் - சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர்.
> செளந்தர்யா நஞ்சுண்டான் - சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்.
> அருண் பிரசாத் - பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்ததின் மூலம் மிகவும் பிரபலம்.
> தர்ஷிகா - விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவரை போட்டியாளராக பார்த்திருக்கலாம்.
> பவித்ரா ஜனனி - ஈரமான ரோஜாவே சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானவர்.
> விஜே விஷால் - விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலம்.
> ஆர்.ஜே.ஆனந்தி - ஆர்.ஜே.வாக மிகவும் பிரபலம். கோமாளி படத்தில் யோகி பாபுவுக்கு மனைவியாக நடித்தவர்.
> சுனிதா - குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து மிகவும் பிரபலம். நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றவர்.
> கானா ஜெப்ரி - கானா பாடகர்
> ரஞ்சித் - பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். சமீபத்தில் வெளியான கவுண்டம்பாளையம் படத்தினை இயக்கி, நடித்தவர். காதல் திருமணங்கள் குறித்த இவருடைய சர்ச்சைக்குரிய பேச்சு இணையத்தில் வைரலானது.
> தர்ஷா குப்தா - படங்களில் நாயகியாக நடித்து பிரபலம்.
> சஞ்சனா - மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து பிரபலமானவர்.
> அக்ஷிதா - செல்லம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர்.
> அர்னாவ் - செல்லம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர்.
> சத்யா - பனிவிழும் மலர்வனம் சீரியலில் நடித்து பிரபலமானவர்.
> தீபக் - விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வந்தவர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago