‘மெய்யழகன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? - கார்த்தி விவரிப்பு

By ஸ்டார்க்கர்

‘மெய்யழகன்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று கார்த்தி விளக்கமளித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் 3 மணி நேர படமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று, பின்பு 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. ஒரு தரப்பினர் படத்தினைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றிக்கு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று கார்த்தி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அதில் கார்த்தி, “‘மெய்யழகன்’ ஒப்புக் கொண்டதற்கு தமிழ் சினிமாவுக்கு அருமையான படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குநர்கள் நன்றி சொல்ல வேண்டும். பாலசந்தர் சார், கே.விஸ்வநாத் சார், மகேந்திரன் சார், பாலு மகேந்திரா சார், கமல் சார் உள்ளிட்ட அனைவருமே உறவுகளை வைத்து கதைகள் செய்து அதை ரசிக்க வைத்து தூங்க விடாமல் செய்திருக்கிறார்கள். அந்த மாதிரியான படங்கள் கிடைக்காதா என்று ஏங்கும்போது, பிரேம்குமார் அப்படியொரு கதையினை எழுதியிருக்கிறார். அதை எப்படி மிஸ் பண்ண முடியும்?

‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றி விழாவில் பலரும் நல்ல படங்களை தேர்வு செய்து நடியுங்கள். ஏனென்றால் நீங்கள் பருத்தி வீரன் படத்திலிருந்து தொடங்கியிருக்கிறீர்கள் என்றார்கள். பொழுதுபோக்கு படங்கள் பண்ணுங்கள், அதிலும் நல்ல படங்கள் செய்யுங்கள் என்றார்கள். அதை மறக்க மாட்டேன். அதிலிருந்து தான் நான் தேர்ந்தெடுத்த பாதை, கதைகள் அனைவருக்கும் தெரியும்.

‘மெய்யழகன்’ படம் பெரிய உரையாடல்களை உருவாக்கி இருக்கிறது. ஒரு நல்ல கலைப் படைப்பின் முதல் விஷயமே உரையாடலை ஏற்படுத்துவதுதான். அப்படி பலரையும் பேசவைத்தது இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அனைத்து அம்சங்களும் நிறைந்த கலைபடைப்பு என்று காட்டுவதற்கு எப்போதாவது தான் நல்ல படங்கள் அமையும். அப்படி தான் ‘மெய்யழகன்’ படத்தை பார்க்கிறேன்.

30 வயதுக்கு மேல் இருப்பவர்கள், வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் இந்தப் படம் போய் சேரும் என்று நம்பினேன். மனதிற்குள் ஆழமாக ஓடிக் கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்துமே இந்தக் கதையில் இருந்தது. இதை நான் மட்டுமல்ல, அனைவருமே ஒரே எண்ணோட்டத்தில் இந்தக் கதையின் மீது இருந்தார்கள்” என்றார் கார்த்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்