ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளராகவும் ஹாரிஸ் ஜெயராஜ் பணிபுரியவுள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பிரதர்’. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் பணிபுரிந்து வருகிறார். மேலும், தீபாவளி வெளியீடாக ‘பிரதர்’ வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இதனை ‘டாடா’ படத்தினை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்.4) மாலை வெளியாகவுள்ளது. நவம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இந்தப் படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘பிரதர்’ படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்ததே, இந்தக் கூட்டணி மீண்டும் இணைய காரணம் என்கிறார்கள். இதில் நாயகியாக புதுமுகமான டவ்டி ஜிவால் நடிக்கவுள்ளார்.
» விஷக் காய்ச்சல் பரவல் - அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
» ‘பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்று புரியவைப்போம்’ - தவெக மாநாட்டை ஒட்டி விஜய் கடிதம்
2025-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படத்தினை வெளியிடலாம் என்ற முனைப்பில் இருக்கிறது ஸ்கிரீன் சீன் நிறுவனம்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago