‘இந்தியன் 3’ படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் படுதோல்வியை தழுவியது. அனிருத்தின் பின்னணி இசையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
’இந்தியன் 2’ படத்தின் முதலீட்டு அளவில் லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டமே ஏற்பட்டது. மேலும், ஓடிடி தளத்திலும் வெளியாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இயக்குநர் ஷங்கரின் படம் இந்தளவுக்கு விமர்சிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே, ‘இந்தியன் 3’ படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, ‘இந்தியன் 3’ படத்தினை நேரடி ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பது உண்மை தான்.
» மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்
» மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு ஒப்புதல்
ஆனால், இன்னும் எதுவுமே முடிவு செய்யப்படவில்லை. இன்னும் கமல், ஷங்கர் உள்ளிட்ட அனைவரிடமும் பேசிய பிறகே முடிவு செய்யப்படும். இப்போதைக்கு நேரடி ஓடிடி வெளியிடும் எண்ணம் லைகா நிறுவனத்துக்கு இல்லை” என்று தெரிவித்தார்கள்.
‘இந்தியன் 3’ ஓடிடி வெளியீடு குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்த போதிலும், படக்குழுவினர் சார்பில் இன்னும் எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago