விஜய்க்கு ‘நோ’, சிவகார்த்திகேயனுக்கு ‘யெஸ்’ சொன்ன நடிகை ஸ்ரீலீலா

By ஸ்டார்க்கர்

விஜய் படத்துக்கு ‘நோ’ சொல்லிவிட்டு, சிவகார்த்திகேயனுடன் நடிக்க ‘யெஸ்’ சொல்லியிருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மட்ட என்ற பாடலில் விஜய் - த்ரிஷா இருவரும் நடனமாடி இருந்தார்கள். இந்தப் பாடல் பெரும் பிரபலமானது. முதலில் இந்தப் பாடலில் த்ரிஷாவுக்கு பதில் ஸ்ரீலீலாவிடம் தான் பேசப்பட்டது. ஏனென்றால் அவருடைய நடனம் இணையத்தில் பெரும் பிரபலம்.

தமிழில் நாயகியாக அறிமுகமாக இருப்பதால், ஒரு பாடலுக்கு நடனம் என்பது சரியாக இருக்காது என கருதி ஸ்ரீலீலா மறுத்துவிட்டார். விஜய்யுடன் நடனமாட மறுப்பா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா. படப்பிடிப்பு தேதிகள், சம்பளம் உள்ளிட்டவை மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிக்கவுள்ள ‘புறநானூறு’ படத்தில் தான் ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார். இதனை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தினை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் அவர் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்