பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தனுஷின் ‘அசுரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்தார். தற்போது வெற்றிமாறனின் ‘விடுதலை 2’-ம் பாகத்தில் நடித்து வருகிறார். ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள அவர் விஜய்யின் 69 வது படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ஹெச்.வினோத்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி மஞ்சு வாரியர் பேசினார். அப்போது "துணிவு படத்தில், வினோத் முழு சுதந்திரம் கொடுத்தார். ஏதாவது காட்சியில் இன்னொரு டேக் கேட்டால் இந்தக் காட்சிக்கு இவ்வளவு போதும், நீங்கள் நன்றாக நடிப்பதற்கு நான் வேறு படம் தருகிறேன் என்று சொல்வார்" என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். இதனால் வினோத் இயக்கும், விஜய் 69 படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகைகள் மமிதா பைஜு, சமந்தா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பதாகவும் சிம்ரன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago