சென்னை: ‘கெத்து’ தினேஷ், கலையரசன் இணைந்து நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் முதல் தோற்றத்தை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘கெத்து’ தினேஷ் நடிப்பில் உருவான படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு டென்மா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ‘கெத்து’ தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படத்தொகுப்பை செல்வா ஆர்.கே. கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர், “ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி பீரங்கி அணுகுண்டுகளால மட்டுமே முடியாது...’’ என கேப்ஷனிட்டுள்ளார். கலையரசனும், தினேஷும் இடம்பெற்றுள்ள போஸ்டரில் மரம் ஒன்று பற்றி எரிகிறது. வறண்ட நிலமும், சிவப்பு கொடியும் கவனம் பெறுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago