தெலுங்கு பட இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

By ஸ்டார்க்கர்

அஜய் பூபதி இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட உள்ளது. ‘ஆர் எக்ஸ் 100’, ‘மஹா சமுத்திரம்’ மற்றும் ‘மங்களாவாரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஜய் பூபதி.

இதில் ‘ஆர் எக்ஸ் 100’ மற்றும் ‘மங்களாவாரம்’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தற்போது தனது படத்துக்காக கதை எழுதி வந்தார் அஜய் பூபதி. அக்கதை துருவ் விக்ரமுக்கு சரியாக இருக்கும் என கருதி கூறியிருக்கிறார். அவருக்கும் கதை ரொம்பவே பிடித்து விடவே, தனது அடுத்த படமாக இருக்கட்டும் என முடிவு செய்துள்ளார்.

இதனால் அஜய் பூபதி - துருவ் விக்ரம் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் தயாரிப்பாளர் யார், துருவ் விக்ரமுடன் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்ட அனைத்துமே பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம். இதன் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் பாக்கியிருக்கிறது. அதனை முடித்துவிட்டு அஜய் பூபதி படத்தில் கவனம் செலுத்த உள்ளார் துருவ் விக்ரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்