விஜய் - த்ரிஷா நடனத்தில் கவனம் ஈர்த்த ‘மட்ட’ பாடல் வீடியோ வெளியீடு!

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மட்ட’ பாடலின் வீடியோ படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி எனக் கூறப்படுகிறது. படம் ரூ.420 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘மட்ட’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்