சென்னை: ஜூனியன் என்.டி.ஆர் தனது விருப்பத்தைப் பகிர்ந்த பேச்சுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.
சென்னையில் ‘தேவாரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஜூனியர் என்.டி.ஆரிடம் “எப்போது நேரடி தமிழ் படம் செய்வீர்கள்” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “எனது மிகவும் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன் சார். என்னுடன் ஒரு படம் பண்ணுங்கள். அதை தமிழிலேயே பண்ணலாம். தெலுங்கில் டப் செய்துக் கொள்ளலாம்” என்று ஜூனியர் என்.டி.ஆர் கூறியிருந்தார்
இந்த பதில் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. பலரும் ஒரு முன்னணி இயக்குநர் இவ்வளவு ஆசைப்படுகிறாரே என்று கூறிவந்தார்கள்.
இதனிடையே, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் வெற்றிமாறன். அவரிடம் ஜூனியர் என்.டி.ஆர் அளித்த பதில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெற்றிமாறன் “நான் அவரை ஏற்கெனவே சந்தித்து பேசியிருக்கிறேன். ஒரு கதையின் ஐடியா குறித்து பேசியிருக்கிறோம். இருவருமே எங்களுடைய பணிகள் முடித்தவுடன் இணைந்து பணிபுரிவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து பணிபுரிய இருப்பது உறுதியாகி இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago