கே
.பாலசந்தர், ரஜினி கூட்டணியில் உருவான ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி ‘சகலகலா வல்லவன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘படையப்பா’, ‘சிவாஜி’ எனப் பல நூறு திரைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் சென்னை வடபழனி யில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ. இங்குள்ள ஏவி.மெய்யப்பச் செட்டியாரின் பங்களா வீடு தற்போது ‘ஏவிஎம் கார்டன் வில்லா’ என்ற பெயரில் நிகழ்ச்சி அரங்கமாக உருமாறியுள்ளது.
இதுகுறித்து ஏவி.மெய்யப்பச் செட்டியாரின் பேத்தி புவனா கூறியதாவது: என் தாத்தா 1965-ல கட்டின பங்களா இது. கிட்டத்தட்ட 10 வருஷம் இங்கே தங்கி தான் சினிமா பணிகளை கவனிச்சாங்க. அப்பறம் மயிலாப்பூர் வீட்டுக்கு போய்ட்டாங்க. அந்த சமயத்துல கோவிந்தராஜுனு ஒரு பிரபல கட்டிடக் கலை நிபுணரை வைத்து ஜப்பான் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட பங்களா இது. 1984-ல இருந்து இப்போ வரை தொடர்ச்சியா சினிமா, சீரியல் படப்பிடிப்புக்குதான் இந்த இடம் பயன்பட்டது.
அண்ணா தொடங்கி எம்ஜிஆர், கருணாநிதி, சிவாஜி, ரஜினி, கமல் வரை பலர் இங்கே நடந்த நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்காங்க. சமீபத்துல இங்கு வந்த கமல்ஹாசன், ‘நான் சின்ன வயசுல வந்து பார்த்தப்போ இருந்த தென்னை மரம், மாமரம் எல்லாம் அப்படியே இருக்கே’ன்னு சொல்லி சந்தோஷப்பட்டார். அப்படிப்பட்ட இந்த இடத்தை சினிமா, சீரியல் படப்பிடிப்புக்கு விட்டது போதும், இனி பொதுமக்கள் பயன்படுத்தும் இடமாக மாறட்டுமேன்னு தோணுச்சு. அதனால, இதைஏவி.எம்.கார்டன் வில்லாவாக உருமாத்தியிருக்கோம்.
திருமண வரவேற்பு, சங்கீத், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள்னு ஒருநாள், 2 நாட்கள் நடக்குற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கிறோம். கார்டன், ஹவுஸ்னு வசதிகளோட இருக்குறதால பலரும் விரும்பிக் கேட்கறாங்க. நிகழ்ச்சி நடக்கும்போது ‘படையப்பா கிளைமாக்ஸ் நடந்த இடம்..’,‘சகலகலாவல்லவன் படத்தில் ‘நேத்து ராத்திரி’ பாட்டு ஷூட் பண்ண இடம்’னு சொல்லி இன்னும் சந்தோஷமாகிடுறாங்க. அதில் எங்களுக்கும் மகிழ்ச்சி!
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago