சினிமா பிடித்து விட்டால் அது விடவே விடாது: கே.பாக்யராஜ்

By செய்திப்பிரிவு

சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ள படம், ‘சேவகர்’. பிரஜின், ஷகானா, போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஆர்.டி.மோகன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரதீப் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரித்துள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் கே.பாக்யராஜ் பேசும்போது. “ஒருவருக்கு சினிமா பிடித்து விட்டது என்றால் அது விடவே விடாது. இந்தத் தயாரிப்பாளர் அப்படித்தான் இங்கே வந்திருக்கிறார். சினிமா ஆசை யாரையும் விடாது என்பதை யோசிக்கும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஏற்காட்டில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் டாக்டர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்.

சினிமா ஆர்வத்தில் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தவர். பிறகு ஒரு வழியாக சமாதானப்படுத்தி படிக்க வைத்து டாக்டராக்கி இருக்கிறார்கள். அவருக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை. அவர் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு ராசுக்குட்டி படத்தில் ஐஸ்வர் யாவுக்கு அப்பாவாக நடிக்க வைத்தேன். அவருக்கு அதில் மகிழ்ச்சி.

இப்படி சினிமாவில் நிறைய நிஜ கேரக்டர்களைச் சேர்த்து இருக்கிறேன். நல்ல படம் எடுத்து தமிழ் ரசிகர்களை நம்பி னால் கை கொடுப்பார்கள். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்