சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு: பெப்சி சார்பில் குழு அமைக்க முடிவு

By செய்திப்பிரிவு

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் சினிமாவின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நவ.1 முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்பைத் தொடங்குவது என்றும் இல்லை என்றால் சுமுக முடிவு எடுக்கும் வரை அனைத்து பணிகளையும் நிறுத்தி வைப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு அனுப்பிய மறு சீரமைப்பிற்கான விதிமுறைகள் அனைத்துக்குமான பதிலை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பியுள்ளோம். பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

புதிய படங்கள் தொடங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவேஅக்.1-முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்புகளைத் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து, பெப்சி சார்பில் இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், டப்பிங் யூனியன் உள்ளிட்ட ஏழு சங்கங்களில் இருந்து குழு அமைக்க உள்ளோம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்கள் அளிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE